Thursday, February 14, 2008

நிகழ்வுகள்

மூடநம்பிக்கை திணிப்புகள் - சிலப்பதிகாரம் முதல் சிவாஜி வரை -பாஸ்கரன்


ஒரு நாட்டின் இலக்கியத்திற்கும் அதன் சமுதாயநிலை மற்றும் அமைப்பிற்கும் நெருங்கிய தொடர்பு காணப்படுகிறது. ஒவ்வொரு இலக்கியமும் அது தோன்றிய காலம் மற்றும் மக்களின் நிலை பண்பாடு போன்றவற்றை வெளிப்படுத்துவதாக உள்ளது. சான்றாக சங்க இலக்கியங்கள் தோன்றிய காலத்தில் வாழ்ந்த மக்களின் பண்பாடு, வீரம், கொடை, காதல் போன்றவற்றை பிரதிபலிப்பதாக உள்ளது. இலக்கியமானது மனிதன் வாழ்க்கையிலும், மனதிலும், அறிவிலும் பெரும்பாதிப்பினை ஏற்படுத்துகிறது. மகாத்மா காந்தியின் வாழ்வில் அரிச்சந்திரா நாடகம் ஏற்படுத்திய தாக்கத்தை இதற்கு உதாரணமாக கூறலாம். எனவே ஓர் இலக்கியத்தை பார்க்கும் அல்லது படிக்கும் ஒருவருக்கு அது ஒரு பொழுதுபோக்காக மட்டும் மல்லாமல் அவர்களின் சிந்தனையை மாற்றி அமைக்கும் சக்தியாகவும் இருக்கிறது.பலநேரங்களில் இலக்கியத்தை படைக்கும் படைப்பாளிகள் சமுதாயத்திற்கு புறம்பான, சமூகம் ஏற்க மறுக்கும் தங்களது கருத்துக்களை, எண்ணங்களை அவர்கள் படைக்கும் இலக்கியத்தில் சமூகம் ஏற்கும் வண்ணம் கதைக்கலம் அமைத்து கதாபாத்திரங்கள் வழியாக தங்களது எண்ணங்களை புகுத்திவிடுகின்றனர். இது திறன் ஆய்வு அடிப்படையில் நோக்கும் போது படைப்பாளி உளவியலின் புறத்தெறிதல் என உளவியல் கூறுகின்றது.இக்கால இலக்கியங்கள் பெண்ணை போகப்பொருளாகவும், அடிமைகளாகவும் சித்தரிக்கும் இவ்வேளையில் நம் சங்க இலக்கியங்கள் குறிப்பாக புறநானுற்றில் போர்க்களம் புகுந்து தன் மகனை தேடும் வீரப்பெண்ணாய் சித்தரித்துள்ளது காணப்படுகிறது. ஆனால் அவற்றிற்கு பின் நம் தமிழ் சமுதாயத்தின் மீது தொடுக்கப்பட்ட ஆரிய மற்றும் பல்வேறு கலாச்சார படையெடுப்புகளுக்கு பின் தோன்றிய இலக்கியங்களில் குறிப்பாக சிலப்பதிகாரம், இராமாயணம், மகாபாரதம் போன்றவற்றில் அவர்களின் சுயநலத்திற்காகவும், வருணாசிரம கொள்கையை புகுத்துவதற்காகவும் அறிவுக்கு புறம்பான பாவம், புண்ணியம், ஜோதிடம், சகுனம், சடங்கு, ஆவி, தெய்வம் போன்ற கதாபாத்திரங்களையும், கருத்துக்களையும் தங்களது இலக்கியத்தில் புகுத்தியுள்ளனர்.காலம் காலமாக இவ்விலக்கியங்கள் ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறைக்கு அறிவு வளரும் முன்னே குழந்தைகளுக்கு கதை, திரைப்படம் போன்றவற்றின் மூலம் பரப்பப்படுகிறது. இக்கருத்துக்கள் குழந்தையாக இருக்கும்பொழுதே நமது நனைவிலியில் பதிவு செய்யப்படுகின்றது. உலக நாடுகள் அனைத்திலும் அறிவியல் வளர்ச்சி ஏற்பட்டபோதிலும் மூடநம்பிக்கை மறையாமல் இருப்பதற்கு இதுவே காரணமாகும்.உலகில் தோன்றிய தந்தை பெரியார், டாக்டர்.அம்பேத்கர் போன்ற பகுத்தறிவாளர்களால் மூடநம்பிக்கை ஓரளவு ஒழிக்கப்பட்டு மானுடம் வளர்ச்சிப் பெற்றது. அறிவியல் வளர்ச்சியின் முழுவெற்றியானது அதனை பயன்படுத்தும் முறையை பொறுத்தே அமையும். ஆனால் கொடுமை இலக்கியங்களை வெளிப்படுத்தும் ஒரு ஊடகமாய் தொலைக்காட்சி மற்றும் திரைப்படம் போன்ற பெரிய அளவில் பயன்படுத்தும் ஊடகங்கள் மக்களின் அறிவினை மழுங்கடிக்கவே பயன்படுத்தப்படுகின்றன.இன்றைய சமுதாயத்தில் அறிவியல் வளர்ச்சி ஓரளவு ஏற்பட்டிருப்பினும் மூடபழக்கம் எனும் கொடிய நோயிலிருந்து நாம் விடுதலை அடையவில்லை என்றே கூறலாம். இன்னும் மூடநம்பிக்கை மக்களிடையே ஆட்கொண்டு உள்ளது என்பதற்கு சான்றh செய்தித்தாள்களில் வெளிவந்த செய்திகள் சில.பள்ளிப்பாளையம் அருகே தனது தீங்கு ஏற்படுவது தன் மகன் பிறந்த ஜாதக அமைப்பு ஜோதிட சாஸ்திரங்களை நம்பி தன் மகனை காவிரி ஆற்றில் மூழ்கடித்து கொன்ற தந்தை. இறந்துவிட்ட தன் சகோதரனை ஜபத்தின் மூலம் உயிருடன் மீட்கப்போவதாக கூறி மூன்று மாதங்களாக பிணத்தை வைத்து பிரார்த்தனை செய்த சகோதரன்.மத்தியப்பிரதேச மாநிலம் பினகண்ட் மாவட்டத்தில் பேய் ஊருக்குள் வந்துவிட்டதாக ஒருவர் கனவு கண்டதால் ஊருக்கு ஒதுக்கப்புறமான ஒரு இடத்தில் பேய்க்கு ஒருவீடு.கரூரில் தலையில் தேங்காய் உடைத்து நூறு பேர் படுகாயம்.இதுபோன்ற செய்திகளை படிக்கும்போது மனிதரில் பலரும் இன்னும் மூடநம்பிக்கை என்னும் பிணியில் பிடிக்கப்பட்டுள்ளது தெரியவருகிறது. இதற்கு பல காரணங்கள் இருப்பினும் இலக்கியம் பெரும்பங்கு வகிக்கின்றது.திரைப்படங்களில் மூடநம்பிக்கை திணிப்புகள்சந்திரமுகிஇப்படத்தில் சந்திரமுகி என்ற கற்பனைக் கதாபாத்திரத்தின் கதையை ஆழமாக உள்வாங்கிய ஒருவர் இன்னொருவராக மாறும் தன்மையாக மாறியதை அறிவியல் ரீதியான உண்மையாகக் கண்டுபிடிக்கப்பட்டாலும், சில மூடநம்பிக்கைகளையும் கையாண்டு இருக்கிறார் இயக்குநர். இறந்தவரின் ஆன்மா கெட்டலையும் என்ற பகத்தறிவிற்கு முரணான திணிப்புகளைப் புகுத்தி. சோதிட சாஸ்திரத்தையும் நம்பியாக வழிபாட்டில் ஈடுபடும் ஒரு சோதிடக்காரரின் உதவியும் தனக்குத் தேவை என்று உளவியல் நிபுணரும் கூறியிருப்பது கதாசிரியாரின் கற்பனையை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.அக்கற்பனை வேண்டாத எண்ணங்களை வளர்ப்பதாகவே அமைந்திருக்கிறது. சாமியின் பெயரைச் சொல்லியும். ஆவி, பேய் போன்ற மூடநம்பிக்கைளை வளர்த்து அதனைப் போல தன்னுள் மாற்றங்களை ஏற்படத்தி நம்ப வைக்கின்றனர். தன்னுடைய சுயநலத்திற்காகவும் உடலில் உள்ள கோளாறுகள் காரணமாகவும் பேயாடுவது போன்ற உணர்வு வெளிப்பாடு நிகழ்கிறது. இது அறிவியல் கண்டறிந்த உண்மை. எத்தனை பேருக்குத் தெரியும். இந்த அறிவியல் உண்மை. அறியாமை என்னும் நோயைக் குணப்படுத்தினாலொழிய மூடநம்பிக்கைகளைக் களைவது கடினம்.பருத்திவீரன்இப்படத்தில் கதாநாயகி சில மனித மிருகத்தால் வேட்டையாடப்பட்டு இறக்கும் தருவாயில் கதாநாயகனிடம் அவனுடைய பாவத்திற்கான தண்டணையே தனக்கு இக்கொடுமை நேர்ந்ததாகக் கூறுகிறாள். இந்த இடத்தில்தான் கதாசிரியாரின் மூடநம்பிக்கை வெளிப்படுகிறது. பாவமும் இல்லை, புண்ணியமும் இல்லை. பகுத்தறிவு மட்டுமே உண்மை என்பதைக் கூற மறந்துவிட்டார் இயக்குநர். இது போன்ற இலக்கிய ஊடகத்தினால் மனிதன் தான் செய்த தவறினை மறைத்து அதனை விதியின் மேல் சுமத்துவதற்கு ஒரு வாய்ப்பாக அமைகிறது. உண்மைக்குப் புறம்பான இது போன்ற இலக்கியத்தில் மாற்றங்களைக் கொணர்ந்து அறிவுக்கான புதுமைகளைக் கொண்டு வர வேண்டும்.சிவாஜிசிவாஜி சமீபத்தில் வெளியாகி மிகப்பரப்பரப்பாக திரையரங்குகளில் ஓடவைத்துக்கொண்டிருக்கும் சிவாஜி படத்திலும் மூடநம்பிக்கைகளைக் கையாண்டு இருக்கிறார் சஙகர். இதில் கதாநாயகிக்கு ஜாதகம் அதாவது கிரஹநிலை சரியில்லை என்றும் எனவே அவளை மணந்து கொள்ளும் நாயகனுக்கு அதனால் பதிப்புகளும் தீமைகளும் ஏற்படும் என்றுகூறி உண்மையிலேயே அதன் பாதிப்புகள் ஏற்படுவது போலவும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. இயக்குனர் சங்கர் கருப்பு பணத்தை மக்களுக்கு பயனுள்ள வழியில் பயன்படுத்தும் முறையினை தெரிவிப்பதுபோல் படத்தை அமைத்திருந்தாலும் ஆழ்ந்து நோக்கின் தன்னுடைய ஜாதகம் மற்றும் ஜோதிடம் என்னும் மூடநம்பிக்கைகளை புகுத்தும் கதை கலமாகத்தான் இத்திரைப்படத்தை பயன்படுத்தியிருக்கின்றார்.இலக்கியத்தைக் கையாளும் இயக்குநர்களுக்கு பெண்களுக்கெதிரான இது போன்ற மூடநம்பிக்கைகள் மூடத்தனம் என்பது புரியவில்லையா. ஜாதகத்தை நம்பி செவ்வாய் தோஷம் உள்ள பெண்கள் ஏராளமானோர் இன்றும் திருமண வயது கடந்தும் திருமணமாகாமல் இருக்கிறார்கள். அப்படியே அவர்கள் திருமணம் செய்தாலும் அதே போல் உள்ள ஜாதகரைத் தேடிப் பிடித்து அவர் எப்படிப்பட்டவராக இருந்தாலும் அந்தப் பெண் ஏற்றுக் கொள்ளவேண்டிய சூழ்நிலை இருக்கிறது. அப்படியிருக்க தோஷங்களும் கிரகங்களும் வெறும் பொய்யே.பெண்களுக்கு எதிரான மூடநம்பிக்கைகளையும் பழங்கதைகளையும் தோண்டிப் புதைக்க வேண்டும். ஜாதகம் ஏதும் பாராமல் காதல் திருமணம் செய்து கொண்ட அனைவரும் வாழ்க்கையில் தோற்றதுமில்லை. சடங்கும், சம்பிரதாயம் பார்த்து திருமணம் செய்து கொண்ட அனைவரின் வாழ்க்கையும் வெற்றியிருப்பதுமில்லை.விதியினால்தான் அனைத்து செயல்களும் நடைபெறும் என்று பழமையைச் சொல்லி ஏமாற்றவது விதியுமில்லை ஒன்றுமில்லை. மனிதனின் மதி மட்டுமே உண்மை என்பதை இலக்கியம் சொல்ல வேண்டும் சகுனம். சம்பிரதாயம், ஆவி, சாமி, பாவம், புண்ணியம் போன்ற வேண்டாச் சொல்லைத் தீயிட்டுக் கொளுத்த வேண்டும். வெறும் பொருளினைச் சேர்க்கும் எண்ணத்தை மட்டும் கதாசிரியர்கள் கொள்ளாது மக்களுக்குச் சிந்தனையைத் தூண்டும் தூண்டுகோலாக அவர்களது கதைக்கரு அமைய வேண்டும். காட்சிகளும் கற்பனைகளும் பகுத்தறிவுச் சிந்தனையை ஏற்படுத்துவதாகக் கதை அமைய வேண்டும். சாதி வெறியும் மடமையை ஒழித்து நாட்டுப்பற்றுணர்வை ஊட்டும் விதமாக இலக்கியம் அமைய வேண்டும். இதுபோன்ற பகுத்தறிவுக்கு புறம்பான மூடநம்பிக்கைகளை திரைப்படங்களில் திணிக்கும் இயக்குனர்களுக்கு எதிராக தமிழர்கள் குரல் கொடுக்க வேண்டும்.
- பாஸ்கரன்(bbaskeey@yahoo.com) நன்றி-கீற்று


------------------------------------------------------------------------------------------------

புதிய தலைமுறையின் புரட்சி
ஜாதகத்தை எரித்த இளைஞர்கள்
பார்ப்பனீயம் மறைமுகமாக ஊடகங்-களிலும், அரசியல் அதிகாரங்களிலும், நீதிமன்ற வளாகங்களிலும் இன்னமும் அது கோலோச்சிக் கொண்டுதான் இருக்கின்றது. பார்ப்பனீயத்திற்கு குடை பிடிக்கின்ற பிரகலா-தன்-கள் இன்னமும் நாடு முழுவதும் இருந்து கொண்டிருக்கின்ற காரணத்தால், அவலத்தால், நாமும் பல்வேறு தளங்களில் அதற்கான எதிர்ப்புகளை ஆற்ற வேண்டிய கடமைப்-பட்டவர்களாக இருக்கிறோம். ...தி.மு..-வைத் தவிர மற்ற திராவிட இயக்கங்கள் இதற்கு எதிராக குரல் கொடுத்து வந்தாலும், அந்த எதிர்ப்பின் குரல்வளையை நெறிக்கின்ற திராணி அந்த பார்ப்பனப் பயங்கரவாதத்திற்கு இன்னமும் இருந்து கொண்டுதான் இருக்-கின்றது. இப்படிப்பட்ட சூழலில்தான் புயலென புறப்பட்டிருக்கிறது இளைஞர் இயக்கம். இது ஏன்? எப்படி? எதற்கு? என்ற கேள்விகள் நமக்குள் முகிழ்க்கின்றன. ஒவ்வொன்றும் அவிழ்க்கிறார் இந்த இயக்கத்தை கட்டமைத்த இளைஞர் நா.எழிலன்.வணக்கம். என்னுடைய பெயர் நா.எழிலன். நான் ஒரு மருத்துவர். இவர் சக்திவேல், உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஆய்வியல் படிக்கிறார். இவர் சேகர் விவேகானந்தாவில் பி.. இங்கிலீஷ் படிக்கிறார். இவர் செல்வக்-குமார் விழுப்புரத்தில் டி.டீ.பி. பணி செய்கிறார். இவர் பிரபாகர் பச்சை-யப்பன் கல்லூரியில் பொருளாதாரம் படிக்கிறார். இவர் சங்கர் ஏழுமலை, சென்னை உயர்நீதிமன்ற மாணவர். இவர் மணிமாறன், வேளச்சேரி குருநானக்கில் இயற்பியல் படிக்கிறார். நாங்கள் அனைவரும் ஒத்த கருத்துள்ளவர்களாக இருந்ததால் இப்படிப்பட்ட கருத்துள்ளவர்-களை ஒருங்-கிணைத்-தால் என்ன என்ற ஒரு உந்துதல் இயல்பாகவே உண்டானது. இதற்கான சரியான வழிகாட்டுதல் வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் (கி.வீரமணி) அவர்களை சந்தித்து எங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொண்டோம்.அவர் வழிகாட்டியபடி, இந்திய அரசியல் சட்டத்தின் பிரிவு 51(எச்) என்ற பிரிவை அடிப்படையாகக் கொண்டு ஒரு இயக்கத்தை கட்டமைக்க முடிவு செய்தோம். என்ன சொல்கிறது இந்தப் பிரிவு.“To develope the scientific temper, humanism, sprit of inquiry and sprom” அதாவது, அறிவியல் உணர்வு, மனித நேயம், ஏன்? எதற்கு? எப்படி? கேள்வி கேட்டல் ஆகியவை மேம்பட வேண்டும். இது உரிமைகூட இல்ல. கடமை, Your fundamental duty. அதனால, நாட்டுக்கு ஒரு குடிமகனா செய்யற கடமையை முன்னிறுத்தி இந்த இயக்கத்தை கொண்டு போறோம்.
கேள்வி: பொதுமக்கள் மத்தியில் ஜாதகங்-களை எரிச்சு ஒரு பரபரப்பையும், எதிர்ப்-பார்ப்பையும் ஏற்படுத்தியிருக்கீங்க ஏன்? இந்த ஜாதக எரிப்பு?பதில்: ஜாதகம், சோதிடம் போன்றவற்றை பார்த்து, பார்த்து ஒரு இனத்தோட வளர்ச்சியே பாதிப்பு ஏற்பட்டுகிட்டிருக்கு. கிரேக்க நாகரீகம் அழிஞ்சு போச்சு. லத்தீன் நாகரீகம் அழிஞ்சு போச்சு. ரோம நாகரீகம் அழிஞ்சு போச்சு. ஏன்னா? அங்கிருக்கிற அரசவை சாமியார்கள் (demi gods) இந்த நேரத்தில போர் வேணாம். இது கெட்ட நேரம், ராகு காலம் அப்படின்னு அறிவியல் தன்மை இல்லாம போர் செஞ்சு, போர் செஞ்சு, பல பேரு செத்து மடிஞ்சு இனம் குறுகிப் போய், பிறகு, அழிஞ்சே போச்சு. சமஸ்கிருதமும் அப்படித்தான். இப்ப வழக்கி-லேயே இல்ல. ஆனா, தமிழ் ஏன் எப்போதும் நடைமுறையில இருக்குன்னா, எப்போதும் ஒரு அறிவியல் தமிழன் உருவாகிட்டேதான் இருக்கான்.அதனால, இன வளர்ச்சிக்கும் சரி, அறிவியல் வளர்ச்சிக்கும் சரி, அறிவியல் தமிழன் கான்செப்ட் தான் சரி. அதனாலதான் முதல்ல ஜாதக ஒழிப்பு.
இளைய தலைமுறையின் எண்ணங்கள்
முடியும் என்பதற்கு முன்னுரை எழுதுமுடியாது என்பதற்கு முடிவுரை எழுது- எம். முன்னா, எம்.காம் முதலாம் ஆண்டு, (டி அண்ட் எஸ்) சென்னைப் பல்கலைக் கழகம், சேப்பாக்கம், சென்னை - 51869க்கு முன்னால் நிலவு என்பதை சிவன் அது சிவனுடைய தலையில் இருக்கிறது கங்கையின் பக்கத்திலே இருக்கிறது என்று எண்ணிக் கொண்டு இருந்தார்கள். 1869க்கு பிறகு ஆம்ஸ்ட்ராங் நிலவுக்கு சென்று வந்த பிறகு நிலவு என்பது பாறைகளும், மலைகளும் நிறைந்தது என்பது விளங்கிவிட்டது. சிவனும் இல்லை, ஜடா முடியும் இல்லை என்று புரிந்துவிட்டது.- ஆர். சேகர், எஸ்.பன்னப்பாக்கம், புதுவயல் அஞ்சல், பொன்னேரி தாலுக்கா, திருவள்ளூர் மாவட்டம்நம்மில் பலர் பல்லி விழும் பலன் பார்க்கிறார்கள். இதில் கபாலம் மீது விழுந்தால் அகால மரணம் தொடை மீது விழுந்தால் தனம் பெருகும் என்று கூறுகிறார்கள். எனவே அனைவரும் தலைமேல் விழாமல் இருக்க குடையை பிடித்துக் கொண்டே இருக்க முடியுமா? அல்லது பல்லி இருக்கும் இடத்தில் அது விழுமா? என்று தொடையைக் காட்டிக் கொண்டுதான் இருக்க முடியுமா?- .பாலு, இரண்டாமாண்டு, பி.எஸ்.சி., இயற்பியல், அரசினர் கலைக் கல்லூரி, நந்தனம்எல்லாவற்றையும் ஜாதகத்தால் அறிந்து முடிவுகாண முடியும் என்றால் ஆழிப்பேரலையையும், குஜராத்தில் நடந்த பூமி அதிர்ச்சியையும் முக்காலத்தையும் கணித்து கூறும் ஜாதகம் முன்னமே அறிவிக்காதது ஏன்?- து. பாஸ்கர், இரண்டாமாண்டு முதுகலை தமிழ், புதுக்கல்லூரிஓராண்டு நோக்கியிருந்தால் பூக்களை வளருங்கள்; பத்தாண்டு நோக்கிருந்தால் மரங்களை வளருங்கள்; முடிவில்லா நோக்கிருந்தால் தன்னம்பிக்கை வளருங்கள்.- கே. கவிதா, 48 பஜனை கோவில் தெரு, சிக்கராயபுரம், குன்றத்தூர் அஞ்சல், சென்னை - 69.நல்ல காலம் பொறக்குது அய்யாவுக்கு நல்ல காலம் பொறக்குது ஜக்கம்மா, காளி, சாமுண்டி, பகவதி அய்யாவுக்கு நல்ல சேதி சொல்லு என்று குடுகுடும்பையை கடகடவென்று அடித்து மற்றவர்களின் வாழ்க்கையை படித்தவன் போல கூறும் அந்த குடுகுடுப்புக்காரனின் வாழ்க்கை ஏன் சாலையில் நிற்கிறது?- லோ. ரேவதி, பிசிஏ முதலாமாண்டு, தமிழ்த் துறை, நிர்மலா மகளிர் கல்லூரி, கோவை - 18புதியதாக கோள் கண்டுபிடித்தனர் என்று கூறுகிறார்கள். அதற்கு ஜாதகத்தில் என்ன பலன் இருக்கிறது என்று எந்த சோதிடமும் சொல்லவில்லையே, ஏன்?- மு. ஜெகநாதன், முதுகலை முதலாமாண்டு, மாநிலக் கல்லூரி, சென்னை - 5.கையேயில்லாதவன் செல்வந்தனாகும் போது கைரேகை நமது வாழ்க்கைப் பாதையை நிர்ணயிக்காது- .ரேவதி, பி.லிட், இரண்டாமாண்டு (தமிழ்) தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் தமிழ்க் கல்லூரி, பேரூர், கோவை - 641 010செவ்வாய் தோஷம், நாகதோஷம் என்ற பெரியல் இன்று பெண்கள் பலர் முதிர்கன்னிகளாக இருக்கும் அவல நிலை நீடிக்கின்றது.- மு.ஜெயலட்சுமி, இளங்கலை கணினி அறிவியல், இரண்டாமாண்டு, திருவள்ளுவர் கலை, அறிவியல் கல்லூரி, குறிஞ்சிப்பாடிபெண்களுக்கு ஒன்று சொல்கிறேன் நீங்கள் மூடநம்பிக்கைக்கு அடிமைகளாக இருக்கும் வரையில் ஆண்கள் உங்களை அடிமைகளாக வைத்திருப்பார்கள். அவற்றிலிருந்து நீங்கள் வெளியேறிவிட்டால் ஆண்களால் உங்களை அடிமைப்படுத்த முடியாது.- டி.ரேகா, மதுரை - 1ஜாதகத்தை நம்புவது என்பது தன்னையே நம்பாததை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறத. அது மனிதருக்கு பாதகமாகத் தான் இருக்கிறது. அதனால் காலம், நேரம், பணம், சக்தி எல்லாம் வீணாகிறது.- டி. உத்தமிநாதன், மதுரைஇராமர் இருந்தார் என்பது ஒரு கற்பனைக் கதை. ஆனால், அதை என்பதை உண்மையென நிரூபிக்க அவர்கள் செய்வது சதித்திட்டம் போலத் தோன்றுகிறது. இச்செயலால் ஒரு ஐந்தாண்டுத் திட்டம் வீணாவது மட்டுமல்லாமல் மக்களின் முன்னேற்றம் தடைபட்டுக் கொண்டிருக்கிறது.- எஸ். மணிமூர்த்தி, மதுரை - 625 009தலைமை அமைச்சர் பதவியேற்று நாட்டையே வழிநடத்த வேண்டிய தலைவர்கள் முதல் பாருக்கெல்லாம் உணவளிக்க சேற்றில் இறங்கும் விவசாயிகள் வரை நாள், நட்சத்திரம், நல்ல நேரம், கெட்ட நேரம் என்று பார்ப்பது நம்மை எங்கே கொண்டு போய் நிறுத்தியுள்ளது என்று எண்ணிப் பார்க்க வேண்டும். மூடநம்பிக்கை எனும் பாம்பினால் கடிக்கப்பட்டு, அறியாமை நஞ்சு உடலிலும் உள்ளத்திலும் பாய்ச்சப்பட்டு ஊறியிருந்தாலும் சரியான பார்வையற்றவர்களாய், மதியிருந்தும் சிந்திக்க இயலாதவர்களாக மவுடீகம் எனும் சேற்றில் புரளுபவர்களாக உள்ளவர்கள் அருள் கூர்ந்து சிந்திக்க வேண்டாமா?- .விக்னேஷ், பழனிசிரிப்பு இன்னிசையின் செயல்கோபம் புண்படுத்தும் கடும் சொல்முன்னேற்றம் தோல்வியின் படிகள்ஜாதகம் மூடநம்பிக்கையின் அஸ்திவாரம்- . பிரியதர்சினி, சேலம் - 16அதிர்ஷ்டம் இந்த சொல் அடிமுட்டாள் தனத்தின் அருஞ்சொற்பொருள்.- இரா. மன்னர்மன்னன், சென்னை - 69
கேள்வி: குறுகிய காலத்தில், இளைஞர் இயக்கத்தை தமிழகம் முழுவதும் கொண்டு சென்றிருக்கிறீர்கள். இந்த வித்தை எப்படி சாத்தியமாயிற்று? அடுத்து இதை எப்படி கட்டமைக்கப்போகிறீர்கள்?பதில்: முதல்ல, எங்களுக்கு, மாணவர்கள், இளைஞர்களோட பல்ஸ் பார்க்க வேண்டிய கட்டாயம் இருந்துச்சு. அதனால, தமிழ்நாடு முழுவதும் இருக்கிற கல்லூரிகளில் கட்டுரை போட்டி நடத்த நினைச்சோம். ஜாதகம் யாருக்கு சாதகம், மூடநம்பிக்கைகள் முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டையா? என்ற தலைப்புகளை அனுப்பி வச்சோம். தொடர்ந்து அவங்க எழுதின கட்டுரைகளை தொகுத்து, இவள் இருளை போக்கன்னு ஒரு புத்தகம் வெளியிட முடிவு பண்ணி, பிப்ரவரி - 23 ஜாதக ஒழிப்பு நாள்னு ஒரு விழா ஏற்பாடு செஞ்சோம். அதுல, பேராசிரியர் சுப.வீரபாண்டியன், மாநில திட்டக்குழுத் துணைத் தலைவர் மு.நாகநாதன், ஊராட்சி செயல்துறை அலுவலர் அசோக்வர்தன் ஷெட்டி அய்..எஸ். ஆகியோர் அந்த விழாவில் கலந்துகிட்டு அறிவியல் தன்மையோடு செயல்படுவது எப்படின்னு மாணவர்களுக்கு அறிவுறுத்த வச்சோம். அந்த இடத்திலேயே 750 மாணவர்கள் தங்களோடு ஜாதகத்தை எரிச்சு ஒரு புரட்சியே செஞ்சாங்க.இந்த உணர்வை அணைய விடாம பாதுகாக்கத்தான் அந்தந்த பகுதிக்குப் போய் பல குழுக்கள் அமைச்சு, அந்த குழுவுல பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் இளைஞர்-கள் அத்தனை பேரையும், தலைவன், தொண்டன் என்ற பாகுபாடில்லாமல், செயல்-திறன், கொள்கை, உணர்வு, அழமான சிந்தனை உள்ள இளைஞர்களை நியமிச்சு இதை தமிழ்நாடு மட்டுமல்லாமல், இந்தியா முழு-வதும் கொண்டு போகப் போறோம்.
கேள்வி: நீங்க ஒரு மருத்துவரா இருந்து-கிட்டு, தன்னலம் கருதாத சமுதாய தொண்டுக்கு வந்திருக்கீங்க. அதுமட்டுமல்ல, இன்றைய இளைஞர்கள் பெரும்பாலும் தன்னலம் கருதக் கூடியவங்கதான். இந்திய அரசாங்கத்தோட, செலவுல, பராமரிப்புல படிச்சிட்டு ஃபாரின் போய் செட்டிலாகறவங்க மத்தியில, நீங்க மட்டும் எப்படி இப்படி?!பதில்: நடைமுறையில பார்த்தீங்கன்னா ஜூடிசியில் சிஸ்டமே இந்த ஆரியனிசம், பிராமணிசம் மத்தவங்கள எப்படியெல்லாம் ஒழிக்கணும்ங்கிறதுக்காக ஒரு ப்ளான் போட்டு தந்திருக்கு. நாமெல்லாம் அந்த ப்ளானுக்கு கட்டுப்பட்டுதான் வாழ்ந்துகிட்டிருக்கோம். இப்ப, பிராமணியமே புதுசா வருது. இண்டஸ்டரியில, அய்.டி. பில்டுல - இதுல இருக்-கிற Top Level Officers அத்தனை பேரும் பார்ப்-பனர்கள்தான். நம்ம மக்கள் அதுல போய் கைக்கூலிகளா இருக்காங்க. பிராமணிசம் இன்னும் different format வருது. வேதிக் அஸ்ட்ராலஜின்னு சுப்ரீம் கோர்ட் அங்கீ-காரத்தோட ஆரம்பிச்சிருக்காங்க. அறிவிய-லுக்கு புறம்பானது வேதிக் அஸ்ட்ராலஜி. இந்திய அரசியல் சட்டத்திற்கும் புறம்பானது.இப்ப மூன்றாவது வகுப்பு பையனுக்கு பாடம் நடத்துற அவருடைய அம்மா, சூரியன் நடுவுல இருக்கு, 9 கோள்களும் சூரியனைச் சுத்துது. பூமி மூணாவதா இருக்குன்னு சொல்-வாங்க. அதே அம்மா தன் பையனுக்கு பொண்ணு பார்க்க போகும் போது ஜாதகம் பார்க்கறாங்க. ஜாதகத்துல என்ன இருக்கு. பூமி நடுவுல இருக்கு. சூரியன் சுத்தி வருது.ஒருவர் இரண்டு விதமாக நடந்து கொள்-கிறார். எவ்வளவோ பிரச்சாரம் பண்ணியிருக்-காங்க. ஒழிஞ்சு போற மாதிரி தோற்றம் இருக்கு. அவ்வளவுதான். இப்ப பாத்தீங்கன்னா சன் தொலைக்காட்சியில இராமாயணம் போடு-றாங்க. அதுவும் சேது சமுத்திர திட்டம் நிறைவேறக் கூடிய காலகட்டத்துல. மக்கள் இத புரிஞ்சுக்கணும். பத்திரிகையில் பாத்தீங்கன்னா? ஜோதிட மலர் தனியா வருது. மக்கள் அடிமைத்-தன்மையிலேயே இருக்கணும். இவங்க தெளிவு பெறக்கூடாது. இந்த மக்கள் இப்படியே இருந்தாதான் நாம் (பார்ப்பனர்கள்) முன்னேற முடியும்ங்கிற தியரிய காலம் காலமா சொல்-லிட்டு வர்றாங்க. இதப் பார்த்திட்டு ஒரு தமிழனா, எப்படி சும்மா இருக்க முடியும். அதான் புறப்பட்டுட்டோம்.
கேள்வி: சரி, இதற்கு ஆதரவு நல்ல வண்ணம் இருக்கிறதா சொன்னீங்க. எதிர்ப்பு எப்படியிருக்கு?பதில்: எதிர்ப்பு இல்லாம எப்படியிருக்கும். நேரடியா இதுவரைக்கும் வர்ல. ஆனா, எங்களைப்-பத்தி, விடுதலை, முரசொலி போன்ற உணர்வு பூர்வமான நாளிதழ்கள்தான் எழுதின, வெகுஜன நாளிதழ்கள் கண்டு கொள்ளவே இல்லை. இதையே நாங்கள் எங்களுக்கான, எங்கள் இயக்கத்துக்கான எதிர்ப்பாக எடுத்துக் கொண்டோம். மற்றபடி, சென்னையிலிருக்கும் அனைத்து கல்லூரி மாணவர்களுடன் எங்களுடன் தொடர்பில் இருக்கிறார்கள். மருத்துவர்-கள், வழக்கறிஞர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் பின்புலமாக இருக்கிறார்கள். ஆகவே, எதிர்ப்புகளை நேர்மையுடன் சந்திக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.அதுமட்டுமல்ல, திராவிடனோட Way of living பார்த்தீங்கன்னா, அறிவியல் தன்மை, பகுத்தறியும் தன்மை, சுயமரியாதையுடன் வாழ்வது, இதுக்கு இடையுறா இருப்பது ஆரியத்தன்மை, பிராமணிக் தாட்ஸ். அதை உடைக்கணும். பல் விளக்குவது போல, உணவு உண்பதைப் போல பகுத்தறிவு சிந்தனைகளை கண்டி-சன்டு பண்ணணும். அதனால, எதிர்ப்பு-களைப் பத்தி நாங்க கவலைப்படறதே இல்லை.
கேள்வி: உங்கள் பிரச்சாரம் படிக்காத மக்களிடம் எடுபடும் என்று நினைக்கிறீர்களா? உங்கள் பிரச்சாரத்தைப் போல ஆயிரம் மடங்கு ஊடகங்கள் உங்களுக்கு எதிரான பிரச்சாரத்தை செய்து கொண்டிருக்கின்றன?பதில்: உண்மைக்கு எப்பொழுதுமே வெற்றிதான். தாமதம் எங்களுக்கு ஒரு பொருட்டல்ல. முதல் கட்டமாக ஜாதகத்தைப் பற்றிய உண்மைகளை எடுத்துச் சொல்லப் போகி-றோம். முதல்ல மூடநம்பிக்கை எங்க நுழையுதுன்னா குழந்தை பொறந்த உடனே குறிக்கிற ஜாதகத்துலதான். குழந்தை பிறப்பைப் பற்றி மருத்துவரான நான் பிரச்சாரம் செய்தால் அதற்கு கூடுதல் பலம் சேர்க்கும். குழந்தையை அம்மா வயித்துலிருந்து எடுத்ததும், குழந்தை அழுவுதா இல்லையான்னு செக் பண்ணிட்டு, பிறகு, குழந்தை கால்ல டோக்கன் கட்டிட்டு, அம்மாகிட்ட தாய்பால் குடிக்க வச்சுட்டு செட்டில் ஆனபிறகுதான் நேரத்த சொல்வோம். நேரம் அடிப்படையிலேயே தப்பாயிடுச்சு. சூரியனை மய்யப்படுத்தாம, பூமிய மய்யப்-படுத்தினது தப்பாயிடுச்சு. இத அடிப்படையா வச்சுதான் ஜாதகம் பாத்து அமோக பொருத்தம், அமோக பொருத்தம்னு சொல்-றாங்க. ஒரே ஜாதகத்தை 10 ஜோதிடர்கள் சொன்னாலும் 10 விதமா பலன்கள் சொல்றாங்க. ஆக மொத்தம் இது மக்கள் காதுல பூ சுத்தற வேலைதான்.எங்க இலக்கு, மூடநம்பிக்கை ஒழிக்கிறது. சமூகநீதி, மனிதநேயம். இத நாங்க இரண்டு வழிகள்ல கொண்டு போகப்போகிறோம். ஒண்ணு, மாமேதை அம்பேத்கர் காட்டிய அரசியல் சட்ட வழி 51(எச்) இன்னொரு வழி பகுத்-தறிவு பகலவன் தந்தை பெரியார் காட்டிய வழி. அதாவது மூடநம்பிக்கை ஒழிப்பு, கற்கள் (கடவுள் பொம்மைகள்) உடைக்கும் பணி. இந்த இரண்டு மாமேதைகளின் தத்துவங்களையே மூலதனமாகக் கொண்டு, மாணவர்கள், இளைஞர்கள் பட்டாளத்தின் துணையோடு எங்கள் இலக்கை எட்டியே தீருவோம்.மருத்துவர் நா.எழிலன் குரலில் இன்றைய புதிய தலைமுறையின் வேகமும் விவேகமும் எதிரொலிக்கிறது.சினிமா, கிரிக்ட், மது போன்ற போதைகளில் ஒரு பகுதி இளம் தலைமுறை சிக்குண்டு இருக்கும் நிலையில் என்ன நடந்தால் எனக்கென்ன என்ற சமூகப் பொறுப்பற்ற இளைஞர்கள் இன்னொரு பகுதியினராக இருக்கும் காலகட்டத்தில் அறிவியல் பார்வையில் சமூகத் தொண்டாற்றி புதிய சமுதாயத்தை உருவாக்க புறப்பட்டுள்ள இளைஞர் இயக்கத்தை பாராட்டாமல் இருக்கலாமா?
:சந்திப்பு: உடுமலை, படங்கள்: புரூனோ

நன்றி-உண்மை